கிறிஸ்துமஸ் அணிவகுப்பில் புகுந்த கார் : நெதர்லாந்தில் அதிர்ச்சி!
நெதர்லாந்தில் அணிவகுப்பொன்றை பார்வையிட காத்திருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே கார் ஒன்று புகுந்ததில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்டர்டாமிலிருந்து (Amsterdam) கிழக்கே 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் உள்ள நன்ஸ்பீட் (Nunspeet) என்ற நகரத்தில், கிறிஸ்துமஸ் அணிவகுப்பை காண காத்திருந்த மக்கள் கூட்டத்திலேயே கார் மோதிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் உடனடியாக வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தெரியவில்லை என்று கெல்டர்லேண்ட் (Gelderland) காவல்துறை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.





