ஆந்திராவில் லாரி மீது கார் மோதி விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் மணல் ஏற்றி வந்த லாரி கார் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சங்கம் மண்டல் அருகே எதிர் திசையில் வந்த லாரி கார் மீது மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் நெல்லூர் நகரத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்களைப் பார்க்க ஆத்மகூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்த உடனே லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார், அவரைத் தேடும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.





