கொழும்பில் நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த கார் – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சாரதி

கொழும்பு – தெஹிவளை மேம்பாலத்தில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்ததில் இன்று இரவு விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது காரில் பயணித்த நபர் வெளியே குதித்து உயிரை காப்பாற்றினார்.
இதனையடுத்து மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் வந்து தீயை அணைத்துள்ளன.
காரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 30 times, 1 visits today)