அயர்லாந்தில் விபத்துக்குள்ளான கார் – 05 பேர் உயிரிழப்பு!
அயர்லாந்தில் (Ireland) கோ லௌத்தில் (Co Louth) இடம்பெற்ற கார் விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
டண்டல்க் (Dundalk), கிப்ஸ்டவுனில் (Gibstown) உள்ள L3168 வீதியில் நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





