பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாது – அலிசப்ரி!
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பொருத்தமற்றது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது முதலமைச்சர் இருப்பார்கள் எனவும், அவர்கள் வெவ்வேறு கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவே இருப்பார்கள் எனவும் கூறினார்.
பொலிஸ் அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்குகின்ற போது அந்த முதலமைச்சர்களே பொலிஸாரை நிர்வாகம் செய்யும் நிலைமையே காணப்படும் எனத் தெரிவித்த அவர், தற்போது தேசிய ரீதியில் ஒரு பொலிஸ் கட்டமைப்பே காணப்படுகின்றது எனவும், பொலிஸ் அதிகாரத்தை கையாளும்பொழுது நாட்டின் நிலை குறித்த கேள்வி எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதானது அச்சமான நிலையை ஏற்படுத்துகின்றது எனவும், அவர் விமர்சித்துள்ளார்.