கருங்கடலில் நீருக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி குண்டுகள்! துருக்கி இராணுவம் அதிரடி

கருங்கடலில் நீருக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை வெடிக்கச் செய்து துருக்கி இராணுவம் அழித்துள்ளது.
துருக்கியில் கருங்கடல் பகுதியில் நீருக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி குண்டுகள் வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டன.
கடந்த 29ம் திகதி இஸ்தான்புல் அருகிலுள்ள சைல் நகர் கடற்கரையில் 28 பீரங்கி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இராணுவ வல்லுநர்கள், அவற்றை நீரிலேயே வெடிக்கச் செய்து அழித்தனர்.
வெடிக்க வைக்கப்பட்ட பீரங்கி குண்டுகள் பழமையானவை என இன்ஸ்தான்புல் கவர்னர் தெரிவித்துள்ளார்.. பீரங்கி குண்டுகள் எவ்வாறு கடல் பகுதிக்கு வந்தது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
(Visited 10 times, 1 visits today)