போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சீனாவில் தூக்கிலிடப்பட்ட கனேடியர்கள்!

இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் நான்கு கனடியர்கள் தூக்கிலிடப்பட்டதை கனேடிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என்றும் அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார்.
கனடாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒட்டாவாவை “பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த” வலியுறுத்தினார்
பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சரிவடைந்து வரும் சூழலில் இந்த தகவல் வந்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)