செய்தி வட அமெரிக்கா

பதவி விலக கனடா பிரதமருக்கு கெடு விதித்த சொந்த கட்சி எம்பிக்கள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 28ஆம் திகதிக்குள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவரது சொந்த கட்சி உறுப்பினர்கள் கெடு விதித்துள்ளனர்.

கனடா நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரடியாக குற்றம் சாட்டியதால் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு சொந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

லிபரல் கட்சி எம்பிக்களின் ரகசிய கூட்டத்தில் ட்ரூடோவும் கலந்து கொண்டார். அப்போது ஒவ்வொரு எம்பிக்களுக்கும் பேச இரண்டரை நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி பேசிய எம்பிக்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது பகிரங்கமாக அதிருப்தியை வெளியிட்டு பேசினார்கள்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 24 எம்பிக்கள் கையெழுத்திட்ட கடிதமும் கொடுக்கப்பட்டது.

அந்த கடிதத்தில், 28ஆம் திகதிக்குள் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. கனடா அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 51 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி