போலந்திற்கு பயணம் செய்யும் கனேடிய பிரதமர் : அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை!
																																		ரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று வார்சாவுக்கு பயணம் செய்து, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்கை சந்திக்கிறார்.
இதன்போது இரு தலைவர்களும் கனடா-போலந்து அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்றுமதி மேம்பாட்டு கனடா, போலந்தின் முதல் அணு மின் நிலையத்தை உருவாக்க உதவும் வகையில் கனேடிய சப்ளையர்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதற்கு ஆதரவாக 2 பில்லியன் டாலர் வரை நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது.
மார்ச் -09 கனடாவில் புதிய அரசாங்கம் ஆரம்பமாகுவதற்கு முன்பு ட்ரூடோ மேற்கொள்ளும் கடைசி ஒப்பந்தம் இதுவாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
போலந்து அடுத்த ஆண்டு அதன் முதல் அணு உலைகளின் கட்டுமானத்தைத் தொடங்க எதிர்பார்க்கிறது, ஆலை 2033 இல் மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
        



                        
                            
