உலகம் செய்தி

மார்ச் மாதம் இந்தியா செல்லும் கனடா பிரதமர் மார்க் கார்னி

கனடாவின்(Canaa) பிரதமர் மார்க் கார்னி(Mark Carney) மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று கனடாவிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் தினேஷ் பட்நாயக்(Dinesh Patnaik) குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ​​கனடா பிரதமர் யுரேனியம், எரிசக்தி, கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, கல்வி மற்றும் கலாச்சாரம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக தினேஷ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரும் கனடாவின் எரிசக்தி அமைச்சர் டிம் ஹாட்க்சன்(Tim Hodgson), கார்னியின் பயணத்தின் நேரம் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மார்க் கார்னி சமீபத்தில் ஜனவரி 16ம் திகதி பெய்ஜிங்கிற்கும்(Beijing) விஜயம் செய்தார், இது 2017ம் ஆண்டுக்குப் பிறகு கனேடிய பிரதமர் ஒருவர் சீனாவிற்கு(China) மேற்கொண்ட முதல் விஜயமாகும்.

சீனத் தலைநகரில், அவர் ஜனாதிபதி ஜி ஜின்பிங்(Xi Jinping), பிரதமர் லி கியாங்(Li Keqiang) மற்றும் சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி(Zhao Lijie) ஆகியோரைச் சந்தித்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!