இலவச விமான சேவைக்காக விமானியாக வேடமிட்ட கனேடிய நபர் கைது
2024ம் ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வணிக விமானியாகவும் விமான ஊழியராகவும் நடித்து நூற்றுக்கணக்கான இலவச விமான சேவைகளை பெறுவதற்காக ஏமாற்றிய கனேடிய(Canadian) நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனேடிய விமான நிறுவனத்தின் முன்னாள் விமான ஊழியரான 33 வயதான டல்லாஸ் போகோர்னிக்(Dallas Pokornik) பனாமாவில்(Panama) கைது செய்யப்பட்டுள்ளார்.
போகோர்னிக் தான் ஒரு விமானி என்று பொய்யாகக் கூறி, மூன்று வெவ்வேறு விமான நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை இலவசமாகப் பெறுவதற்காக ஒரு போலி ஊழியர் அடையாள அட்டையை வழங்கியதாக ஹவாய் மாவட்ட அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போகோர்னிக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு $250,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




