இலங்கையில் தீவிரமடையும் பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் தற்போது டினியா (Tinea Infection) எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது.
இதனால் அவதானமாக செயற்படுமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் இடையே இந்த நோய் பரவி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் நிபுணர் வைத்தியர் ஜானக அகரவிட்ட தெரிவித்தார்.
தோலில் அரிப்பு ஏற்படுவதே இதன் பிரதான அறிகுறி என அவர் குறிப்பிட்டார்.
அதிக வியர்வை மற்றும் ஈரளிப்பான இடங்களில் இந்த நோய் வேகமாக பரவுமென வைத்தியர் ஜானக அகரவிட்ட கூறினார்.
தொழில் செய்யும் இடங்களிலும் வீட்டில் உள்ளவர்களிடையேயும் ஒரே உடையை மாற்றி அணிபவர்களிடையேயும் இத்தொற்று வேகமாக பரவக்கூடுமென வைத்தியர் ஜானக அகரவிட்ட தெரிவித்தார்.
இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் எவைும் நோய் நிலைமை குறைவடையாத பட்சத்தில், வைத்தியசாலைக்கு சென்று, இதுவரை எடுத்துக்கொண்ட சிகிச்கைகளின் விபரங்களை வழங்கி சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளவது சிறந்தது எனவும் அவர் வலியுறுத்தினார்.