செய்தி வட அமெரிக்கா

கனடாவில் முதல் முறையாக அமுலாகும் கட்டுப்பாடு – புலம்பெயர்ந்தோருக்கு அதிர்ச்சி

கனடா வரலாற்றிலேயே முதல் முறையாக, கனடாவில் தற்காலிகக் குடியிருப்பு அனுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுவருவதாக கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில், கனடாவில் தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்படுவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்டமாக, செப்டம்பரில் முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுப்பாடு சர்வதேச மாணவர்களுக்கும், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என மில்லர் சுட்டிக்காட்டியுள்ளா்.

தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்படுவோரின் எண்ணிக்கையை, தற்போதிருக்கும் 6.2 சதவிகிதத்திலிருந்து, கனடாவின் மக்கள்தொகையில் 5 சதவிகிதமாக குறைக்க கனடா திட்டமிட்டுவருவதாக மில்லர் தெரிவித்துள்ளார்.

மேலும், சில கனேடிய நிறுவனங்கள், பணிக்கு எடுக்கும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த கட்டுப்பாடு, மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த குறிப்பிட்ட காலியிடத்துக்கு கனேடியப் பணியாளர்கள் கிடைக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்கான காலகட்டத்தையும் குறைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!