இந்தியா செய்தி

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தையை நிறுத்திய கனடா

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை துவங்குவது பற்றி இரு நாடுகள் சார்பிலும் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா தரப்பில் இருந்தே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

திடீரென பேச்சுவார்த்தை நிறுத்திக் கொள்வது பற்றி வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வர இருப்பதை ஒட்டி, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக இந்தியா மற்றும் கனடா இடையே கிட்டத்தட்ட ஆறு முறைக்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது.

(Visited 12 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி