இலங்கை செய்தி

இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு கனடா ஆதரவு!

இலங்கையை மீளக் கட்யெழுப்பும் வேலைத்திட்டத்துக்கான ஒத்துழைப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், இலங்கைக்கான கனடா தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இது பற்றி பேசப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அலரிமாளிகையில் நேற்று மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து பேசப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன் விவசாயத் துறை மற்றும் எதிர்கால ஆசிரியர்-மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட கல்வித் துறையிலான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு தம்மால் முடிந்த ஒத்துழைப்புகளை கனடா வழங்கும் என தூதவர் உறுதியளித்தள்ளார் என தெரியவருகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!