மேலும் 5 ஆண்டுகள் விளையாடலாம் – எம்.எஸ். தோனி

நடப்பாண்டு IPL தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது தோனி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், அடுத்தாண்டு IPL தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்று தோனி தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி கூறியதாவது, அடுத்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் வந்துவிடுவார், அவர் வந்ததும் அனைத்தும் சரியாகிவிடும்.
IPL 2025ல் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்று சொல்லவில்லை. இருப்பினும் சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். மினி ஆக்சன் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் அணியில் சில வீரர்களை எடுக்க உள்ளோம்.
அடுத்த 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு, என்னுடைய கண்கள் நன்றாக உள்ளது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சூட்சமம் என்னவென்றால், உடல் தகுதிக்கு இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லை. கண்களை வைத்து மட்டுமே விளையாட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.