தினமும் தலைக்கு குளிக்கலாமா? ஏற்படும் பிரச்சினை தொடர்பில் வெளியான தகவல்
நம்மை நாம் எப்படி பராமறித்துக்கொள்கிறோம் என்பதை, நாம் முடியை எப்படி பார்த்துக்கொள்கிறோம் என்பதை வைத்து சொல்லி விடலாம். ஒரு சிலர், தங்கள் முடிக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்று யோசித்து, ஹேர் கேர் செய்வதாக யோசித்து அவர்களுக்கே தெரியாமல் பல சமயங்களில் முடியை கெடுத்துக்கொள்வர்.
இன்னும் சிலர், தங்கள் முடியை சுத்தமாக பராமறிக்காமல், பெரும்பாலான முடியை இழந்தவுடன் மருத்துவரை அணுகுவர். இது இரண்டுமே ஏதாவது ஒரு வகையில் நம்மை முடியை இழக்க செய்து விடும், என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். முடி பராமறிப்பில் முக்கியமான ஒன்று, தினமும் தலைக்கு குளிப்பது.
தினமும் தலைக்கு குளிப்பவர்கள்..
நம் உடலில் இருந்து வரும் வியர்வையை சுத்தம் செய்ய, அழுக்கை போக்க நாம் உடலுக்கு தினம் தோறும் குளிக்கிறோம். உடலில் இருந்து வியர்வை வருவது போல, தலையில் இருந்தும் வியர்வை வரும்.
இதை அவ்வப்போது தலைக்கு குளித்து சுத்தம் செய்யவில்லை என்றால், அது பின்னாளில் பொடுகு பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளில் கொண்டு சென்று விட்டுவிடலாம். நம்மில் பலருக்கு, தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கும். குறிப்பாக ஆண்கள் பலர், இந்த பழக்கத்தினை பின்பற்றுகின்றனர். இது நல்லதா?
பலருக்கு, தினசரி தலைக்கு குளிப்பது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். இருப்பினும், ஏதேனும் முடி சம்பந்தமான பிரச்சனைகளை கொண்டிருப்பவர்களுக்கு இதில் விலக்கு இருக்கிறது என்றும் கூறுகின்றனர். அதே போல, நமது முடியின் அமைப்பை பொறுத்தும் தினமும் தலைக்கு குளிப்பது அமையும். எனவே, உங்களின் முடி அமைப்பை தெரிந்து கொண்டு, பின்னர் தலை முடியை அலசவும்.
எத்தனை நாளைக்கு ஒரு முறை குளிக்கலாம்?
காய்ந்த முடி கொண்ட (dry hair) கொண்டவர்கள், தலைமுடியை அலசுவதற்கு நாட்களை கணக்கிட வேண்டும். வாரத்தில் ஒரு முறை அல்லது இரு முறை தலைக்கு குளிப்பதே அவர்களின் முடிக்கு போதுமானதாக இருக்கும். மிகவும் காய்ந்த முடி இருப்பவர்கள் (very dry hair) வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தலைக்கு குளித்தால் போதுமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மிகவும் மெல்லிய முடி கொண்டவர்கள், வாரத்தில் மூன்று முறை தலைக்கு குளிக்கலாம் என்றும், அதிகம் பொடுகு வரும் பிரச்சனை கொண்டவர்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தினமும் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்:
தலை முடியில் இயற்கையாக இருக்கும் எண்ணெய், முடி வளர்ச்சிக்கு உதவக்கூடியது. இதை, அடிக்கடி தலைக்கு குளிப்பதால் நாமே கெடுத்துக்கொள்ளாம். தலைக்கு குளித்து விட்டு நாம் ஹேர் ட்ரையர் உபயோகித்தாலும் முடியின் நுணிகள் உடைய வாய்ப்பிருக்கிறது. எனவே, அதையும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தலை முடியை தினமும் அலசுவதால், நமது முடி ட்ரை ஹேராக மாறலாம். எனவே, இந்த காரணத்தாலும் தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம்.