உலகம் செய்தி

சீனா, தென் கொரியா உச்சிமாநாடு – உறவுகளை மேம்படுத்தும் முயற்சி கைகூடுமா?

சீன ஜனாதிபதி சி ஜின்பிங் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் ஆகியோர் திங்கட்கிழமை இரண்டாவது முறையாக உச்சிமாநாட்டை நடத்தினர்.

அண்டைய நாடுகளில் அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கிடையிலான சிக்கலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டு கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டின் ஒரு பகுதியாக, சி ஜின்பிங், லீ ஜே மியுங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்காக, லீ ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கில் நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு தென் கொரிய ஜனாதிபதி சீனாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

சீனா, தென் கொரியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி என்பதால், பொருளாதார உறவுகள் இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக அமைந்தன.

இதேவேளை, வட கொரியா தொடர்பான பாதுகாப்பு விவகாரங்களிலும் சீனாவின் பங்கு முக்கியமானதாக உள்ளது.

லீ சீனாவுக்குச் செல்லும் முன், வட கொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவிய சம்பவம் பிராந்திய பாதுகாப்பின் அவசரத்தைக் காட்டியது.

உச்சிமாநாட்டில் பேசிய ஜி ஜின்பிங், சீனாவும் தென் கொரியாவும் அண்டை நாடுகளாக அடிக்கடி தொடர்புகொண்டு நல்லுறவை வலுப்படுத்த வேண்டும் என்றார். இதை லீ ஜே மியுங் ஆதரித்தார்.

சீனாவுடனான உறவுகளில் சமநிலையைப் பேண லீக்கு இது ஒரு முக்கிய சோதனை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார ஒத்துழைப்பில் ஒருமித்த கருத்து இருந்தாலும், தைவான், கடல்சார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!