பிரச்சாரம் செய்பவர்கள் இனி இங்கிலாந்திற்குள் நுழைய முடியாது : வெளியான அறிவிப்பு!
வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்கள் இங்கிலாந்தில் நுழைய தடை விதிக்கப்பட உள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மிகவும் ஆபத்தான தீவிரவாதிகளை அதிகாரிகள் கண்டறிந்து எச்சரிக்கை பட்டியலில் சேர்ப்பார்கள் எனத் தெரிகிறது.
குறித்த பட்டியலில் உள்ள எவருக்கும் நுழைவு மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் டவுனிங் ஸ்ட்ரீட்டில் ஆற்றிய உரையில் இந்த விடயங்களை முன்வைத்துள்ளார்.
எங்கள் மதிப்புகளுக்கு விரோதமான மற்றும் நமது ஜனநாயக மரபுகளுக்கு மதிப்பளிக்காத சிறு குழுக்களால் பாரிய விளைவுகள் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பொது நன்மைக்கு உதவாத” நபர்களைத் தடுக்க அமைச்சர்களுக்கு ஏற்கனவே அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரங்கள் பொதுவாக தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்கள் இங்கிலாந்துக்கு வருவதை தடுக்க பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இனவெறி, தூண்டுதல், அல்லது மிரட்டல் அல்லது வன்முறையைப் பயன்படுத்தி ஜனநாயக செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நபர்களை சேர்க்க, அமைச்சர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்த முடியும் என்றும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.