கம்போடியா – தாய்லாந்து மோதல் – சமரச முயற்சியில் அமெரிக்கா – டிரம்ப் அறிவிப்பு

கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் தலைவர்களுடனும் தனித்தனியாக உரையாடியதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பும் உடனடியாக சண்டை நிறுத்தம் அறிவித்து, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்ததாக டிரம்ப் கூறியுள்ளார்.
இது இந்தியா–பாகிஸ்தான் இடையிலான யுத்தத் தாக்கங்களை நினைவுபடுத்துகிறது. விரைவில் அமைதி முயற்சிகள் பலன் அளிக்கும் என நம்புகிறேன், என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 4 visits today)