இங்கிலாந்தில் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு அழைப்பு!
இங்கிலாந்தில் 22 வயதுக்குட்பட்ட அனைத்து தனிநபர்களுக்கும் இலவச பேருந்து பயணத்தை வழங்க பசுமைக் கட்சி இன்று அழைப்பு விடுத்துள்ளது.
வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்று கட்சித் தலைவர் சாக் போலன்ஸ்கி (Zack Polanski) தெரிவித்துள்ளார்.
யுனிவர்சல் பஸ் பாஸ் திட்டம் ( universal bus pass scheme) சுயநிதியாக இருக்கும் என்று கட்சி பரிந்துரைத்துள்ளது. அதிகரித்த பேருந்து பயன்பாடு பொருளாதார ஊக்கத்தை அளிக்கும் என்றும் அக்கட்சி வாதிடுகிறது.
இதேவேளை ஸ்கொட்லாந்தில் இந்த திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





