கலிபோர்னியா மிருகக்காட்சிசாலையின் பழமையான விலங்கு – 141 வயதில் மரணம்
கலிபோர்னியாவில்(California) உள்ள சான் டியாகோ(San Diego) மிருகக்காட்சிசாலை பழமையான மற்றும் பிரியமான கலபகோஸ்(Galápagos) வகை ஆமை கிராமா(Gramma) இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமா 1928 மற்றும் 1931 க்கு இடையில் சான் டியாகோ மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கலிபோர்னியாவில் உள்ள கிராமா 20க்கும் மேற்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள், இரண்டு உலகப் போர்கள் மற்றும் இரண்டு தொற்றுநோய்களைக் கடந்து வந்துள்ளது.
கிராமாவுக்கு சரியாகத் தெரியாத பிறந்தநாள் இருந்தாலும், நிபுணர்கள் சுமார் 141 வயது என்று குறிப்பிட்டுள்ளனர்.




