கலிஃபோர்னியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு; தன்னை தானே சுட்டு கொண்ட துப்பாக்கிதாரி !

கலிஃபோர்னியா கல்லூரியில் இரண்டு குழந்தைகளைச் சுட்டுக் காயப்படுத்திய துப்பாக்கிக்காரன் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரிழதுள்ளார்.
காயமடைந்த இரு குழந்தைகளும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு மனோவியல் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று ‘பட்’ கவுண்டி ஷெரிஃப் கோரி ஹோனியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயப் பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் தொடர்பில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
“அவர்கள் உயிர் தப்பியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவர்கள் குணமடைய நீண்ட நாள்களாகும்,” என்றார் ஷெரிஃப் கோரி ஹோனியா.
சாக்ரமெண்டாவிலிருந்து தெற்கே 89 கிலோ மீட்டர் தொலைவில் ஒரோவில் நகர்ப்புற சமூகத்தில் உள்ள செவந்த் டே அட்வென்டிஸ்ட்டின் ஃபெதர் ரிவர் பள்ளியில் டிசம்பர் 4ஆம் திகதி பிற்பகல் ஒரு மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
துப்பாக்கிதாரி, பள்ளி நிர்வாகிகளைச் சந்தித்து மாணவர் ஒருவரை சேர்ப்பது குறித்து பேசுவதாக இருந்தது. ஆனால் நிர்வாகியைச் சந்தித்தவுடன் வகுப்பறைக்கு வெளியே இருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கிக்காரன் சுட்டான். பின்னர் தன்னை நோக்கி அவன் துப்பாக்கியை திருப்பிக் கொண்டான் என்று அவர் கூறினார்.
கலிஃபோர்னியா நெடுஞ்சாலை சுற்றுக் காவல் அதிகாரி ஒருவர் உடனடியாக அவசர உதவிக்கான அழைப்பை ஏற்று பள்ளிக்கு விரைந்து வந்தடைந்தபோது, துப்பாக்கிதாரி சம்பவ இடத்திலேயே இறந்துகிடந்தான். அவனுக்கு அருகில் துப்பாக்கி ஒன்று இருந்தது. எஞ்சிய 35 மாணவர்கள் தேவாலயத்துக்கு மாற்றப்பட்டு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.