மீண்டும் அமைச்சரவை மாற்றம்

மற்றுமொரு அமைச்சரவை திருத்தம் செய்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி 6 அமைச்சர்களின் விடயங்கள், பொறுப்புகள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பந்துல குணவர்தன, விதுர விக்கிரமநாயக்க, நளீன் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, டிரன் அலஸ், பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரின் பொறுப்புகள் மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அமைச்சரவை மாற்றத்தில், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு அமைச்சரவை அல்லாத அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னகோன், ஷெஹான் சேமசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் அமைச்சுப் பதவிகளைப் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)