ஜப்பானில் பிப்ரவரி 8ம் திகதி இடைத்தேர்தல்
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சி (Sanae Takaichi) எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்திருந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற சனே தகைச்சி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தனது புதிய திட்டங்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், 64 வயதான சனே தகைச்சி பிப்ரவரி 8ம் திகதி இடைத்தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு குறித்த மக்களிடையே நிலவும் கவலைகளுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் முடிவு ஜப்பானின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





