பிரித்தானியாவை அலங்கரித்த வண்ணத்துப்பூச்சிகள்
பிரித்தானியாவில் சில வகை வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மற்றவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. வண்ணத்துப்பூச்சி இனங்களைக் கண்காணிக்கும் அமைப்பு அந்தத் தகவலை வெளியிட்டது.
செக்கர்டு ஸ்கிப்பர், ப்ரிம்ஸ்டோன், லார்ஜ் ப்ளூ, ரெட் அட்மிரல் ஆகிய வண்ணத்துப்பூச்சி இனங்கள் கடந்த ஆண்டில் பெருகியுள்ளன.
1976இல் தரவுகளின்பதிவு தொடங்கப்பட்ட பிறகு, இவ்வகை வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை சாதனை அளவில் கூடியுள்ளதாகக் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
எனினும் சில வகை வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது. Small Pearl-bordered Fritillary, Small Tortoiseshell ஆகிய வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கு மேல் குறைந்தது.
பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழலின் தாக்கம் போன்ற நெருக்கடிகளைப் பூச்சிகளும் வண்ணத்துப்பூச்சிகளும் எதிர்நோக்குகின்றன.