நாடு திரும்பிய வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய வர்த்தகரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் துபாயிலிருந்து நேற்று அதிகாலை 02.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 100 காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
(Visited 13 times, 1 visits today)





