இந்திய அரசால் வழங்கப்பட்ட பேரூந்துகள்; இன்று யாழில் மீள கையளிப்பு நிகழ்வு
இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கொழும்பில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் மீள கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (13) இடம்பெறவுள்ளது
வடக்கு மாகாணங்களின் ஓவ்வொரு மாவட்டங்களிலுள்ள இ.போ.ச.க்கு சொந்தமான சாலைகளுக்கும் கிராமிய மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்த இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் புதிய பேருந்துகள் வழங்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் வவுனியா 04, யாழ்ப்பாணம் 04 ,கிளிநொச்சி 04,மன்னார் 03, முல்லைத்தீவு 03,பருத்தித்துறை 03, காரைநகர். 03 என இ.போ.ச வடக்கு பிராந்திய சாலைகளின் கிராமிய சேவைகளுக்கு என 24 பேருந்துகள் கடந்த கிழமை வழங்கப்பட்டிருந்த நிலையில் அவை இதுவரை போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவில்லை.
அவ்வாறு இருக்கையில் ஏற்கனவே வழங்கப்பட்ட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தாமல் இன்றையதினம் மீண்டும் விழா எடுத்து பேருந்துகளை கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தி்ல் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் வழங்கப்பட்ட ஒவ்வொரு பேருந்துக்கும் நாள் ஒன்றிற்கு 5000 ரூபா கட்டப்பட வேண்டும். அவ்வாறு இருக்கையில் ஒரு வாரத்திற்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளின் குத்தகை பணத்தினை எவ்வாறு செலுத்த போகின்றார்கள். என்கின்ற கேள்வி எழுவதோடு , கையளிக்கப்பட்ட பேருந்துகளுக்கு மீண்டும் ஒரு விழா அவசியமா என்கின்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.