ஈரானில் நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 13 பேர் பலி!
ஈரான் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று இஸ்ஃபஹானில் (Isfahan) இருந்து வடகிழக்கு நகரமான மஷாத் (Mashhad) நோக்கிச் சென்ற பேருந்து தண்டவாளத்தில் மோதி, பின்னர் எதிரே வந்த டாக்ஸியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 11 பேருந்து பயணிகளும் டாக்ஸியில் பயணித்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்புப் பிரிவுகள் உட்பட அவசர குழுக்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக அந்நாட்டு காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





