ஐரோப்பா

நியூயார்க்கில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து : இருவர் பலி (photos)

நியூயார்க்கின் லாங் ஐலேண்டிலிருந்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பென்சில்வேனியா பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க் நகருக்கு வடக்கே சுமார் 60 மைல் தொலைவில் உள்ள ஆரஞ்சு கவுண்டியில் இந்த விபத்து சம்பவம் நேற்று (21.09) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். அதில் 05 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது

ஃபார்மிங்டேல் உயர்நிலைப் பள்ளியில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மதியம் 1:12 மணியளவில்,  50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக விவரிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் மொத்தமாக 40 மாணவர்கள் பயணித்ததாகவும், முன்பக்க டயர் ஒன்று பழுதடைந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

PHOTO: A bus rolled over and crashed in Orange County, New York. (WABC)

 

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்