காத்மண்டுவில் ஆற்றில் கவிழ்ந்த பஸ் – 8 பயணிகள் உயிரிழப்பு!
நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தில் உள்ள பகுதியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தடிங் மாவட்டத்தில் கஜுரி பகுதியருகே சென்றபோது பஸ் அருகேயுள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்ற மீட்பு குழுவினர் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் ஆண்கள் ஆவர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
(Visited 13 times, 1 visits today)





