பாகிஸ்தானில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து -10 பேர் பலி!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
பாலகசார் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த பஸ்சின் முன் பக்க டயர் ஒன்று வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 2 times, 2 visits today)