உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து – 4 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் கார் மீது மோதாமல் இருக்க முயன்ற பேருந்து 500 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 8 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர்.
28 பேருடன் சென்ற பேருந்து பித்தோராகரில் இருந்து ஹல்த்வானிக்கு சென்று கொண்டிருந்தபோது, பீம்டால் பகுதியில் உள்ள ஆம்தாலி அருகே சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
தவறான பக்கத்திலிருந்து வந்த கார் விபத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுத்ததாக டிரைவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 8 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
ஓட்டுநர் உட்பட மீதமுள்ள 24 பேர் காயம் அடைந்து பீம்தாலில் உள்ள சமூக நல மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த அமைச்சர், உடனடியாக மீட்புப் பணியை மேற்கொள்ள உள்ளூர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.