பிரான்சில் மலை உச்சியில் இருந்து விழுந்த பேருந்து : மூவர் பலி, ஆபத்தான நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதி!
தென்மேற்கு பிரான்சில் சுற்றுலா பயணிகள் பேருந்தொன்று குன்றில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு குழந்தை உட்பட பலர் காயமடைந்துள்ளனர.
அன்டோராவிற்கு அருகிலுள்ள போர்டே-புய்மோரன்ஸின் பைரனீஸ் ஸ்கை ரிசார்ட்டுக்கு அருகில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த பேருந்தில் 48 பேர் பயணித்துள்ள நிலையில், 8 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகளில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்பானிஸ் மற்றும் கொலம்பிய நாட்டவர்கள் குறித்த பேருந்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.