குவாத்தமாலாவில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து – 15 பேர் பலி!
குவாத்தமாலாவில் (Guatemala) உள்ள இன்டர்-அமெரிக்கன் (Inter-American) நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
அத்துடன் 19 பேர் காயமடைந்துள்ள நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதிக பனிப்பொழிவினால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





