பெருவில் செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து : 30 பேருக்கு எலும்பு முறிவு!
பெருவில் உள்ள புகழ்பெற்ற மச்சு பிச்சு தளத்தில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
சுற்றுலா தலமான அகுவாஸ் கலியன்டெஸ் நகரை இணைக்கும் மலைப்பாதையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த 30 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இத்தாலி மற்றும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, பிரித்தானியர்கள் மற்றும் ஐரிஸ் நாட்டை சேர்ந்தவர்களும் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.





