மெக்சிகோவில் டிரக் ஒன்றுடன் மோதிய பேருந்து : 08 பேர் பலி, 27 பேர் காயம்!

மெக்சிகோவின் வளைகுடா கடற்கரையில் நேற்று (27.12) பேருந்தும் டிரக் ஒன்றும் மோதிக்கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
வெராக்ரூஸ் மாநிலத்தில் வழக்குரைஞர்கள், மாநிலத் தலைநகர் சலாபாவிற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் விடியற்காலையில் விபத்து நடந்ததாகக் கூறியுள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஏடிஓ-லைன் பேருந்தில் பயணம் செய்தவர்களாவர். உயிரிழந்தவர்களில் மூன்று ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த 27 பேர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அவர்களின் நிலை குறித்து உடனடி தகவல் இல்லை.
விபத்துக்கான காரணம் தெளிவாக இல்லை. விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)