ராஞ்சியில் தீ பிடித்து எறிந்த பேருந்து – நூலிழையில் உயிர் தப்பிய 40க்கும் மேற்பட்ட பயணிகள்
ராஞ்சியில் (Ranchi) பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஞ்சி-லோஹர்தகா (Ranchi-Lohardaga) நெடுஞ்சாலையில், ஜார்க்கண்டில் (Jharkhand) இருந்து சத்ராவுக்கு (Chatra) பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
“அதிர்ஷ்டவசமாக, பேருந்து சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று காவல் நிலைய பொறுப்பாளர் மனோஜ் கர்மாலி குறிப்பிட்டுள்ளார்.
மின்கல அடுக்கு (Battery) பெட்டிக்கு அருகில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், பேருந்தில் வைக்கப்பட்டிருந்த ரசாயனக் கரைசல்கள் காரணமாக தீ வேகமாக பரவியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திரப் பிரதேசத்தில் (Andhra Pradesh) தனியார் பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி




