இலங்கையில் விபத்திற்குள்ளான பேருந்து – 12 பேர் வைத்தியசாலையில்!
இலங்கை – ரந்தெனிகலவில் இன்று (29) மாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியது. இதில் குறைந்தது 12 பேர் காயமடைந்ததாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரந்தெனிகலவில் 36வது மற்றும் 37வது மைல்கற்களுக்கு இடையில் ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது.
திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில் கந்தெகெட்டிய மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





