ICC டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்த பும்ரா
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா.
இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு முன்பாக உத்வேகம் கிடைக்கும்படியாக ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிரிஸ்பேனில் 9 விக்கெட்டுகள் எடுத்து 14 புள்ளிகள் முன்னேறியுள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. அஸ்வினின் அதிபட்ச 904 புள்ளியை சமன்செய்துள்ளார்.
டிசம்பர் 2016இல் அஸ்வின் இந்த சாதனையை படைத்திருந்தார். கடந்த பிரிபேன் டெஸ்ட்டுடன் அஸ்வின் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியல்
1. ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா) – 904 புள்ளிகள்
2. ககிசோ ரபாடா (தெ.ஆ) – 856 புள்ளிகள்
3. ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸி.) – 852 புள்ளிகள்
4. பாட் கம்மின்ஸ் (ஆஸி.) – 822 புள்ளிகள்
5. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 789 புள்ளிகள்
ஹேசில்வுட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். பாட் கம்மின்ஸ், பும்ரா இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.