செய்தி விளையாட்டு

ICC பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 907 புள்ளிகளை குவித்த பும்ரா

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 907 புள்ளிகளை குவித்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

இந்திய பந்துவீச்சாளர்களில் இதற்கு முன்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் 904 புள்ளிகளை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது பும்ரா முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 904 புள்ளிகள் சேர்த்து அஸ்வினின் சாதனையை பும்ரா சமன் செய்திருந்தார். மெல்பர்ன் போட்டியில் பும்ரா இரு இன்னிங்ஸையும் சேர்த்து 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இதனால் கூடுதலாக 3 புள்ளிளை பெற்று புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் பும்ரா. இதன் மூலம் உலக அரங்கில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்றவர்களின் பட்டியலில் 17-வது இடத்தை இங்கிலாந்தின் டேரக் அண்டர்வுட் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார் பும்ரா.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 15 புள்ளிகளை கூடுதலாக பெற்று 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாட் கம்மின்ஸ், மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். மேலும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் பாட் கம்மின்ஸ் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மெல்பர்ன் போட்டியில் அவர், இரு இன்னிங்ஸையும் சேர்த்து 90 ரன்கள் சேர்த்திருந்தார்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 854 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறிய 4-வது இடத்தை பிடித்துள்ளார். மெல்பர்ன் போட்டியில் சதம் விளாசிய நித்திஷ் குமார் ரெட்டி 20 இடங்கள் முன்னேறி 53-வது இடத்தை அடைந்துள்ளார்.

(Visited 40 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி