இலங்கை

தென்னிலங்கையின் அடுக்குமாடி குடியிருப்பில் தோட்டாக்கள் கண்டுப்பிடிப்பு!

பொரளை, செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் கழிவறைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு வகையான துப்பாக்கிகளின் 15 உயிருள்ள தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

T56 துப்பாக்கிகள் மற்றும் M16 துப்பாக்கிகளில் உயிருள்ள தோட்டாக்கள் பயன்படுத்தப்படுவதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர், கொழும்பு மாநகர சபை ஊழியர்களுடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தமான கழிவறையை சுத்தம் செய்யும் போது உயிருள்ள வெடிமருந்துகளை கண்டுபிடித்துள்ளார்.

பொரளை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த உயிருள்ள வெடிபொருட்கள் பொலிஸாரிடம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவற்றை சில காலங்களுக்கு முன்னர் யாரேனும் புதைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்