இந்தியா செய்தி

வரவு செலவுத்திட்ட தாக்கல் – இந்தியப் பங்குச்சந்தை கடும் சரிவு

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமையான இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வரவுசெலவுத்திட்டம் தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று இந்தியப் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையாகும். ஆனால் வரவுசெலவுத்திட்டத்தை முன்னிட்டு இன்று பங்குச்சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் பிற்பகலுக்கு பின் நடைபெற்ற வர்த்தகத்தின் போது, மும்பை பங்குச்சந்தையின் 30 முக்கிய பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் முன்னணி 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டது.

வரவு செலவுத்திட்ட உரை முடிந்தவுடன் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவுடனும், நிஃப்டி 250 புள்ளிகள் சரிவுடனும் வர்த்தகமாகி வருகின்றன.

இந்த சரிவிற்கு காரணம் வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பங்குச்சந்தை பரிவர்த்தனை வரி,பங்குகள் பரிவர்த்தனை வரியை உயர்த்தி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டநிலையில் இந்த சரிவு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, எதிர்கால ஒப்பந்தங்கள் மீதான வரி 0.02%-லிருந்து 0.05%-ஆகவும், ஆப்ஷன்ஸ் மீதான வரி 0.15%-ஆகவும் உயர்த்தப்பட உள்ளது

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!