ஐரோப்பா

Ukவில் இன்று பட்ஜெட் தாக்கல் – வைட்ஹாலை (Whitehall) முற்றுகையிட்ட விவசாயிகள்!

பிரித்தானியாவில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் வைட்ஹாலில் (Whitehall) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மெட் காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளை மீறி டிராக்டர்களை அந்தப் பகுதிக்குள் செலுத்தி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள குடும்ப பண்ணை வரிக்கு (‘family farm tax’)  எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்ட அமைப்பாளர்கள், விவசாயிகள் கலந்துகொள்வதைத் தடுக்க முடியாது என்று கூறியுள்ளதுடன், காவல்துறை வாகன அணுகலை கட்டுப்படுத்துவதையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இருப்பினும் உள்ளூர் பகுதி, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகளுக்கு “கடுமையான இடையூறு” ஏற்படக்கூடும் என்று கருதியே வாகன அணுகலை கட்டுப்படுத்தியதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

புதிதாக விதிக்கப்படும் பரம்பரை வரியானது  குடும்பம் நடத்தும் வணிகங்களை கடுமையாக பாதிக்கும் என்றும், நில விற்பனையை கட்டாயப்படுத்தும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

மேலும் பிற வரிகள், குறைந்த விளைபொருள் விலைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற பரந்த பிரச்சினைகளையும் விவசாயிகள் எடுத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!