2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!
2026 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 பெரும்பான்மை வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர், 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ராதா கிருஷ்ணன், பழனி திகாம்பரன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வரவு செலவு திட்டம் தொடர்பான மூன்றாவது வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நாளை (15) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 5 visits today)




