பௌத்த பிக்குகளுக்கு நேரம் இல்லையாம்!!
திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அரச மரத்தின் கிளை
உடைந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தேசிய உணவு விற்பனை நிலையத்துக்கு முன்னால் விழுந்து காணப்படுகின்றது.
தற்போது அசாதாரண சூழ்நிலை காரணமாக பௌத்த பிக்குகளுக்கு நேரமில்லாமையினால் குறித்த மரக்கிளை அகற்றப்படாமல் காணப்படுகின்றது.
வைத்தியசாலைக்கு சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த லொறியின் மேல் பகுதி பட்டமையால் அரச மரத்தின் கிளை உடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
திருகோணமலையில் பௌத்த பிக்குகளின் கொடுப்படியினால் கிளையை அகற்ற முடியாத நிலைக்கு வைத்தியசாலை நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.
மக்களுக்கு இடையூறாக உள்ள குறித்த அரச மரத்தின் கிளையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் முன்வந்து குறித்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு பிரித் சொல்லி வெட்டி அகற்றுவதற்கு முன் வர வேண்டும் என புதீதிஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.




