இலங்கை

இரு பெண்களுடன் நிர்வாணக் கோலத்தில் பௌத்த பிக்கு : கைது செய்யுமாறு உத்தரவு!

நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும்,  இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பிற்கு அண்மையில் உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவரும், இரு பெண்களையும் நிர்வாண நிலைக்கு உட்படுத்தி அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பிக்கு மற்றும் உடன் இருந்த இருவரை தாக்கியவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சட்டத்தை எவரும் கையில் எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை  குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!