திருகோணமலையில் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் முயற்சி – பொலிஸாரை தாக்கிய பிக்கு
திருகோணமலையில் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் முயற்சி கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு முறியடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகர கடற்கரைக்கு அருகில் விகாரை அமைக்கும் நோக்குடன், பிக்கு தலைமையிலான குழுவினால் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பிரச்சினை தீவிரமடைந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்தபால விஜயபாலவுக்கு உடனடியாகத் தெரிவித்தார்.
இதனையடுத்துத் தலையிட்ட அரசாங்கம், பொலிஸ் பாதுகாப்புடன் புத்தர் சிலையை அகற்ற நடவடிக்கை எடுத்தது.
இதன்போது, பிக்கு தலைமையிலான குழுவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தமையால், அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் பொலிஸார் மீது பிக்கு ஒருவர் தாக்குதல் மேற்கொண்டமை மேலும் பிரச்சினையைத் தீவிரப்படுத்தியது.
எனினும், இரவு வேளையில் கடற்கரைப் பகுதியில் இருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://x.com/ShanakiyanR/status/1990101446755512358?s=20





