இந்தியா

புதுமண தம்பதி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 5பேரை கோடாரியால் வெட்டிக்கொன்ற சகோதரன்

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியை சேர்ந்தவர் ஷிவ் வீர் ( 28). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே ஷிவ் வீரின் சகோதரன் சோனுவுக்கு ( 20) சோனி என்ற பெண்ணுடன் 23ம் திகதி திருமணம் நடைபெற்றது.

அன்றைய தினம் திருமண நிகழ்ச்சிக்கு பின் இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது இன்று அதிகாலை 5 மணியளவில் ஷிவ் வீர் தான் வைத்திருந்த கோராடியால் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்த சகோதரன் சோனு அவரது மனைவி சோனியை கொடூரமாக வெட்டிக்கொன்றார்.

பின்னர், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மற்றொரு சகோதரர் பஹ்லன், சோனியின் சகோதரன் சவ்ரவ், நண்பன் தீபக் என மொத்தம் 5 பேரை ஷிவ் வீர் கோராடியால் கொடூரமாக வெட்டிக்கொன்றுள்ளார். தொடர்ந்து ஷிவ் வீர் தனது மனைவி, அத்தை, தந்தை ஆகியோரையும் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

புதுமணத் தம்பதி உட்பட 6 பேர் வெட்டிக்கொலை! நடுநடுங்க வைக்கும் சம்பவம் | 6 Members Killed In Same Family

குடும்பத்தினரின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது வீடே ரத்தமாக கிடந்துள்ளது.உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இதற்கிடையே ஷிவ்வீர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்

விரைந்து வந்த அதிகாரிகள்,உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.பின் இறந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை சுட்டுக்கொன்ற ஷிவ் வீர் தானும் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்த கொடூர கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே