இந்தியா

தங்கையின் தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற சகோதரன்!

மாற்று மத இளைஞரை காதலித்த தங்கையின் தலையை வெட்டிய அண்ணன், தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஆசிபா (18). இவரது சகோதரர் ரியாஸ் (22).இந்நிலையில் , ஆசிபாவும் அதே கிராமத்தை சேர்ந்த சந்த் பாபு என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

காதலர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியதையடுத்து, ஆசிபாவின் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்தனர்.இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் ஆசிபாவையும் அவரது காதலன் சந்த் பாபுவையும் கண்டுபிடித்தனர்.ஆசிபாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த பொலிஸார் சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Man beheads sister: Man walks to police station

மாற்று மதத்தை சேர்ந்த நபரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக ஆசிபாவுக்கு அவரது அண்ணன் ரியாசுக்கும் இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரியாஸ் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தங்கை ஆசிபாவின் தலையை வெட்டியுள்ளார்.

அதன் பின்னர் வெட்டி எடுத்த ஆசிபாவின் தலையுடன் வீட்டில் இருந்து நடந்தே பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து, ரியாசை கைது செய்த பொலிஸார் ஆசிபாவின் தலையை அவரிடமிருந்து கைப்பற்றினர்.பின்னர், வீட்டில் கிடந்த ஆசிபாவின் தலையில்லா உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தங்கை மாற்று மதத்தை சேர்ந்த நபரை காதலித்ததால் அண்ணனே தங்கையின் தலையை வெட்டி எடுத்து ஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே